திருமண விழாவில் பங்கேற்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில்  கவுராய் டோல் டாக்ஸ் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற அவர்களின் வாகனம் மீது, லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேற்கு ஆக்ரா எஸ்பி சத்யஜித் குப்தா கூறுகையில், ‘ராஜஸ்தானில் உள்ள பிவாரைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குடும்பத்தினர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாட்னா நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனத்தை லாரி முந்திச் சென்றதால் விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே 4 உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: