‘ஒத்தைக்கு ஒத்தை வா’ போலீசாருடன் பா.ஜ. நிர்வாகிகள் மோதல்: வீடியோ வைரல்

திருப்பூர்: காங்கயம் அரசு மருத்துவமனையில் போலீசாருக்கும் பா.ஜ. நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாத வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்யகம் அருகே தாராபுரம்-காங்கயம் வந்த அரசு பஸ்சில் போலீசாருக்கும் பா.ஜ. நிர்வாகிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று புகார் கொடுக்க சென்றுள்ளனர். இத்தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று இரு தரப்பிலும் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், பா.ஜ., மாவட்ட செயலாளர் ராஜ் என்பவர் பணியில் இருந்த ரமேஷ் என்ற போலீசை ஒருமையில் பேசியதுடன், சட்டையை கழட்டி வைத்து விட்டு வா ஒத்தைக்கு ஒத்தை பாக்கலாம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பா.ஜ. மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட சில நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்பு இரு தரப்பினரையும் போலீஸ் உயரதிகாரிகள் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: