தாயை நன்றாக கவனித்துக் கொண்டதால் இளைஞரை கரம்பிடித்த ரிங்கி - பிங்கி: மகாராஷ்டிரா போலீஸ் வழக்கு

சோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் அக்லூஜின் மல்சிராஸ் தாலுகாவைச் சேர்ந்த சிறுதொழில் தொழிலதிபர் அதுல் என்ற இளைஞருக்கும், மும்பையை சேர்ந்த பட்டதாரி சாகோதரிகள் இருவரான ரிங்கி மற்றும் பிங்கி ஆகியோருக்கு, ஒரே மேடையில் திருமணம் நடந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் என்பவர் அக்லுஜ் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மணமகன் மற்றும் 2 மணமகள்களின் திருமணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஐபிசி பிரிவு 494ன் கீழ் அக்லுஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி ஆகியோரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அதுல் அவரை கவனித்துக் கொண்டார். அதனால், இவர்களது குடும்பத்தினருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அதுலை சகோதரிகள் இருவரும் காதலித்து வந்தனர். அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அதன்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமண சட்டங்களின்படி குற்றமாகும். இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: