×

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது: உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்

ஜெனீவா: கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார். 2019-ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா உயிர்க்கொல்லி வரஸ்  கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் 65 லட்சம் உயிர்களை பழிவாங்கியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய பெருந்தொற்று இந்த ஆண்டு படிப்படியாக குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போது கொரோனா பரவல் தாக்கல் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகவில்லை. ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானோம் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு தகுந்த எதிர்ப்பார்புகளுடன் இருந்தாலும் பரிசோதனையில் ஏற்பட்டுள்ள தொய்வும் கண்காணிப்பில் வெளிப்படும் அலட்சியமும், உரிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பதாகவும் மீண்டும் கொரோன பரவும் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார். சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய அதானோம் அங்கு நடந்து வரும் போராட்டங்களுக்கு கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை பிரிவு தலைவர் மைக்குரியான் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்தும் பொறுப்புடன் மனித உரிமையையும் சம அளவில் பேன வேண்டிய கடமை சீனாவுக்கு உள்ளதாக கூறினார். இதனிடைய குளிர் பிரதேச நாடுகளில் பண்டிகை காலம் தொடங்கி உள்ள நிலையில் பல லட்ச கணக்கானோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை  தெரிவித்துள்ளது.

குளிர்காலங்களில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளூடன் கொரோனா பாதிக்கும் போது அதன் மரணத்தை ஏற்படுத்தாலம் என்றும் இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் எதிர்பாரத்த அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்று எச்சரித்துள்ளது. எனவே தேவையான முன்னேற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளது.


Tags : China , China's coronavirus outbreak is picking up speed again: instructions to the world to take appropriate measures
× RELATED சீனா படைகளை குவிக்கும் நிலையில் இந்திய கடற்படை மாபெரும் போர் ஒத்திகை