சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு குறித்த வழக்கில் தீர்ப்பு: தமிழக அரசின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக அரசின் உரிமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி சென்னையில் ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் ஐடிசி கிரான் சோலா இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுதிறனாளிகளுக்கு பனி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மேற்படிப்புக்கான 50% இடஒதுக்கீட்டை மாநில அரசே நிரப்பிக்கொள்ளலாம் என வந்துள்ள தீர்ப்பு அரசு மருத்துவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 100% இடஒதுக்கீட்டையும் ஒன்றிய அரசே நிரப்பும் என்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் மாநில அரசுக்கான உரிமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யேக கை, கால்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க அமைக்கபடும் கட்டிடம் 15 நாட்களில் பணிகள் முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெறும் முதல்வர் நேரில் சென்று மருந்து பெட்டகத்தை வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: