×

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றுள்ள இந்த திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு இன்று இலவச திருமணம் செய்துவைக்கப்படுகிறது. திருவாண்மியூரில் வைத்து நடைபெறும் இந்த திருமன நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததுடன், 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.

திருமண விழாவிற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றுள்ள இந்த திருமண விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைச்சர் சேகர் பாபு ஒரு செயல் பாபு என பல இடங்களில் நான் தெரிவித்துள்ளேன். அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், ஆனால் முதல்வரை வேலைவாங்க கூடியவராக அமைச்சர் சேகர் பாபு இருக்கிறார் கோவில்களில் அர்ச்சனையை தமிழ் மொழியில் மேற்கொள்ள செய்துள்ளோம்.

அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனங்களை செய்துள்ளோம்.ரூ.3700 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலயத்துறை சார்பில் பல்வேறு கல்லூரிகளை நமது அரசு தொடங்கி இருக்கிறது. அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததால் மதத்தை வைத்து குற்றம், குறைகளை திமுக ஆட்சி மீது சொல்கிறார்கள்.

 சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் மூலமாக எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டத்தையும் நடத்திக்கொண்டிருக்கின்றோம். இத்தனையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்துள்ளோம். இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.  அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Thiruvanmyur ,Pharaideswarar temple ,Chief Minister ,MC. K. Stalin , Chief Minister M.K.Stalin conducted weddings for 31 couples at Thiruvanmiyur Darshaneeswarar temple.
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...