முதன்முதலில் பைக் திருடிய வாலிபர் கைது

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர், மீன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1ம்தேதி இரவு தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் காலை பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பைக்கில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் கணேசனின் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில், கிழக்கு தாம்பரம், பாரத மாதா சாலையில் சேலையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில், கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியில் கணேசன் வசிக்கும் தெருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (19) எனவும், முதன்முதலில் பைக் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: