பஸ், ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள் குடும்பத்தினரிடம் சேர்ப்பு

தாம்பரம்: தாம்பரம் பேருந்து மற்றும் ரயில் நிலையம், சாலைகள், மார்க்கெட் பகுதியில் என ஏராளமான ஆதரவற்றோர் சுற்றித் திரிந்து வருகின்றனர். இவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கில் தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று தாம்பரம் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த முதியவர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டவர், தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் கருணை உள்ளங்கள் என்ற அமைப்பை சேர்ந்த செந்தில்குமார் உதவியுடன் மீட்கப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து, அவர்களை குளிப்பாட்டி, புதிய ஆடை அணிவித்து, உணவு வழங்கி குடும்பத்தினரின் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். குடும்பத்தினர் பற்றி விவரம் தெரியாதவர்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பினர்.

Related Stories: