ஒருநாள் சிறப்பு தணிக்கையில் திருந்தி வாழப்போவதாக 26 குற்றவாளிகள் உறுதிமொழி

சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பாக சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று கூடுதல் காவல் ஆணையர்கள் ஆலோசனையின்பேரில், காவல் குழுவினர் ஒருநாள் சிறப்பு தணிக்கை செய்தனர். இதில், சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 707 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு 26 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 தலைமறைவு குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு வழக்கு, வீடு புகுந்து திருட்டு மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 596 குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 28 குற்றவாளிகளிடம்  நன்னடத்தை உறுதி  மொழி பிணை பத்திரம் பெற குற்ற விசாரணை முறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: