அரசு பள்ளிக்கு உதவிபொருட்கள்

திருவொற்றியூர்: மாத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கு தேவையான உதவி பொருட்களை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். மணலி மண்டலம், 19வது வார்டில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஏராளமான ஏழை சிறார்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திமுக பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் காசிநாதன் முன்னிலை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ அங்கன்வாடி பள்ளிக்கு பீரோ, மேஜை நாற்காலி, குக்கர் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் போன்ற பல்வேறு உதவி பொருட்களை வழங்கினார். அதேபோல், மஞ்சம்பாக்கம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேருக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், நிர்வாகிகள் தாமரைச்செல்வன், மஞ்சம்பாக்கம் பாபு, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: