புதுவை கவர்னர் தமிழிசை பெயரில் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பி பெண் அமைச்சரிடம் மோசடி முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து கடந்த 30ம் தேதி ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதன் புரொபைலில் கவர்னர் தமிழிசை படத்துடன், அவர் அனுப்பியதுபோல் அமேசான் கூப்பனை ரீ சார்ஜ் செய்து விடுமாறு கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ஜவஹருக்கும் இதுபோன்று மோசடியாக கவர்னர் பெயரில் குறுந்தகவல் அனுப்பி சிலர் பணமோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் உஷாரான அமைச்சர் உடனே கவர்னர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது யாரும் குறுந்தகவல் அனுப்பவில்லை என்பதை உறுதிபடுத்தினர். பணம் பறிக்க முயன்ற ஆசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசுக்கு அமைச்சர் தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குபதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர். பெண் அமைச்சருக்கு குறுந்தகவல் வந்த செல்போன் நம்பரை கொண்டு அந்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: