ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் 60 யானைகள் முகாம்

ஓசூர்:  கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து, ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் சானமாவு, ஊடேதுர்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை, உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. நேற்று அதிகாலை நாகமங்கலம் ஏரி பகுதியில் சுற்றித்திரிந்தன. தொடர்ந்து வனப்பகுதிக்கு செல்லாமல் ஏரியில் தஞ்சம் அடைந்துள்ளன. கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் வந்து ஏரியில் இருந்த யானைகளை பட்டாசு வெடித்து, மீண்டும் ஊடேதுர்கம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: