பீஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தி உள்ளது. சீனாவில் கொரோனா தொற்றுக்கு தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரவலை தடுக்க பல நகரங்களில் ஊரடங்கு, கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அதிபர் ஜின்பிங் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. மாணவர்களும், அரசுக்கு எதிராக நூதன முறையில் போராடி வருவதால் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பீஜிங், ஷிஜியாங்சுவாங், தையூன் உட்பட பல்வேறு நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.