பாகிஸ்தான் தூதரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நேற்று முன்தினம் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் திடீர் தாக்குதல் நடத்தினான். பாகிஸ்தான் தூதர் உபைத் உர் ரஹ்மான் நிஜாமனியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரக வளாகத்தில் அவர் நடைபயிற்சி செய்த போது, துப்பாக்கியால் மர்ம நபர் சுட்டுள்ளார். இதில் தூதர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். அவரது பாதுகாவலர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கான் தூதருக்கு பாகிஸ்தான் அரசு நேற்று சம்மன் விடுத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: