பெரியாறு அணை 140 அடியை எட்டியது

கூடலூர்: பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நேற்று காலை விநாடிக்கு 2,001 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 6 மணிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று காலை 139.55 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 140 அடியானது. தமிழகப்பகுதிக்கு 511 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவ.9ல் 136 அடியானவுடன் இடுக்கி மாவட்ட  நிர்வாகத்திற்கு, தமிழக பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்தனர். நேற்று மாலை 140 அடியானபோது 3ம் கட்ட எச்சரிக்கை மற்றும் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இன்று அணை நீர்மட்டம் 142 அடி உயர வாய்ப்புகள் உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: