இமாச்சலில் நிலநடுக்கம்

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. சம்பா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சம்பா மாவட்டத்தில் டிஸ்சா அருகே தார் மக்கானை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகி இருந்தது. சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த உடனடி விவரங்கள் தெரியவில்லை. இதே போல் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தகானு பகுதியை மையமாக கொண்டு நேற்று முன்தினம் மாலை 3.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.5 புள்ளிகளாக பதிவாகியிருந்ததாக மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் விவேகானந்த் கதம் தெரிவித்தார்.

Related Stories: