தாய் புலியை தொடர்ந்து 4 குட்டிகளையும் கொன்றது ஆண் புலி

சந்திராபூர்: மகாராஷ்டிரா வனப்பகுதியில் தாய் புலியைத் தொடர்ந்து 4 குட்டிகளையும் ஆண் புலி கொன்றது. மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் நேற்று 4 குட்டிப்புலிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காப்பகத்தின் தலைமை வன பாதுகாவலர் ஜிதேந்திரா ராம்கயோன்கர் கூறுகையில், ‘‘ஷிவ்னி வனப்பகுதியில் 4 குட்டிகள் இறந்து கிடந்தன. அவற்றில் 2 ஆண்கள், 2 பெண் குட்டிகள். அனைத்திற்கும் 3 முதல் 4 வயது இருக்கும். அதன் உடலில் புலியின் நக காயங்கள் உள்ளன’’ என்றார்.

இதே காப்பகத்தின் ஷியோனி வனப்பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 4 குட்டிகளின் தாய் புலி கொல்லப்பட்டு கிடந்தது. அதை ஆண் புலி அடித்துக் கொன்றிருக்கலாம் என வன அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 4 குட்டிகள் பிறந்ததில் இருந்து அவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஷிவ்னி வனப்பகுதியில் ஆண் புலி நடமாட்டம் தென்பட்ட நிலையில், 4 குட்டிகள் கொல்லப்பட்டிருப்பதால் இதற்கு ஆண் புலிதான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: