பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு என கூறி அரசியல் செய்கிறார் பாஜ தலைவர் அண்ணாமலை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அரசு உத்தரவிட வேண்டும். காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. பெரம்பலூர் மாணவி விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதேபோல், தமிழகம் உள்பட இந்தியாவில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சமுதாயம் சீரழிவை சந்திக்கும். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கும் பங்கு இருக்கிறது. பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு என ஒன்றிய அரசின் உள்துறை எந்த விதமான குறையும் கூறியதாக தெரியவில்லை. இதனை வைத்து பாஜ தலைவர் அண்ணாமலை அரசியலுக்காக பேசி வருகிறார்.

Related Stories: