தமிழ்நாடு ஊர்காவல் படையினரின் பணிநாள் குறைப்பை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்க்காவல் படை பணி நாட்களை மாதத்தில் 5 நாட்களாக குறைத்து 2017ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஊர்க் காவல் படையை சேர்ந்த அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஊர்க்காவல் படையினருக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே தாங்களுக்கு பணி  வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஊர்க்காவல் படையினர் பணிக்காலம் 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரிகப்பட்டு, அவர்களுக்கான ஊதியமும் எட்டு மணி நேரத்திற்கு 560 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படை என்பது அரசு பணி இல்லை. சொந்த விருப்பத்தின் பேரில் பணியாற்றுவது என்றார். இதையடுத்து, அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பணி நாட்களை குறைத்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: