ராணிப்பேட்டை நகராட்சியில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜின் உத்தரவின்படி ராணிப்பேட்டை நகராட்சிக்கு நீண்ட நாட்களாக கடை வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி மேலாளர் ப.தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பொறுப்பு ப.புருஷோத்தமன் இளநிலை உதவியாளர் ப.வெங்கடேசன் மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் சென்று கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், ராணிப்பேட்டை நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் குடிநீர் துண்டிப்பு நடவடிக்கையும் நேற்று முதலே துவங்கப்பட்டுவிட்டது. இந்நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்தப்படும். என நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: