×

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: பிரெசிடென்ட் கோப்பையை வென்றார் இந்திய வீரர் ருத்ரான்கிஷ பாட்டீல்

கெய்ரோ: எகிப்தில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ரான்கிஷ பாட்டீல் பிரெசிடென்ட் கோப்பையை வென்றார். இத்தாலி நாட்டை சேர்ந்த டேனிலோ சொல்லாஜோ என்பவரை 16-8 என்ற புள்ளி கணக்கில் பிளே-ஆப் சுற்றில் வீழ்த்தி இந்திய வீரர் ருத்ரான்கிஷ பாட்டீல் பிரெசிடென்ட் கோப்பையை கைப்பற்றினார்.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.) சார்பில் 2022-ம் ஆண்டுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் கடந்த நவ. 28-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் இளம் வீரர் ருத்ரான்கிஷ பாட்டீல்(18) 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.

அவர், இத்தாலி நாட்டை சேர்ந்த டேனிலோ சொல்லாஜோ என்பவரை 16-8 என்ற புள்ளி கணக்கில் பிளே-ஆப் சுற்றில் வீழ்த்தி பிரெசிடென்ட் கோப்பையை கைப்பற்றினார். அவருக்கு இந்திய விளையாட்டு கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் அக்டோபரில் எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எப்.பின் ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுக்கான உலக சாம்பியன்ஷிப் 2022 போட்டிகளில் பாட்டீல் கலந்து கொண்ட அவர், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்க பதக்கம் வென்றதுடன், 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.


Tags : Rutrankisha Patil ,Prescent Cup , International Shooting Competition, President Cup, India's Rudrankisha Patil
× RELATED சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல்...