கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிந்துள்ளது. இதில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதேபோல் திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும், புதுசேரியில் இருந்து 180 பேருந்துகள்  திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கோவிலூரிலிருந்து 115 சிறப்பு பேருந்துகளும், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: