போதை பொருட்கள் விற்றகடை உரிமையாளர் கைது

திருத்தணி: கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரை கைது செய்தனர். திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி. சிபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரின் உத்தரவின்படி, சிறப்பு தனிப்படையின் உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் நேற்று திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமம் பள்ளிக்கூட தெருவில் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் (30) தனது கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனை கைது செய்து அவரிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: