பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 2 மாணவர்கள் அதிரடி கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மாட்டுங்கா பகுதி மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு 13 வயது மாணவி, பள்ளியில் நடந்த ஆண்டு விழா நடன நிகழ்ச்சி ஒத்திகைக்காக சக மாணவிகளுடன் பயிற்சியில் இருந்தார். வகுப்பறையில் மாணவி தனியாக இருந்த போது, 8ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அந்த மாணவியை 2 மாணவர்களும் மிரட்டி உள்ளனர். பயந்துபோன மாணவி  நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

ஆனால் அவரது உடல்நல பாதிப்பை தொடர்ந்து பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடூமையை கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாட்டுங்கா போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்த 2 மாணவர்கள் மீதும் கூட்டு பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டனர். பள்ளியின் வகுப்பறையிலேயே மாணவி ஒருவர், உடன் படிக்கும் 2 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: