ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ. 5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் திட்ட பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு 161, ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ரூ. 5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் திட்ட பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு 161 ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகர் 2வது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து ரூ.5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் திட்ட  பணியை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா. மோ.அன்பரசன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்தப் பாலப் பணியானது 22.4 மீ. நீளத்திலும், இருபுறமும் 1.5 மீ அகலத்தில் நடைபாதையுடன்  11.5 மீ. அகலத்திலும் அமைக்கப்படுகிறது.  இத்திட்டப்பணியானது உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.  

ஜீவன் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மேடவாக்கம் பிரதான சாலையை அடைவதற்கு சுமார் இரண்டு கீ.மீ. தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.  இப்பாலம் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் போது இப்பகுதி மக்கள் மேடவாக்கம் பிரதான சாலையை சென்றடையலாம். இப்பணியானது இரண்டு வருட காலங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா, முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி, துணை ஆணையாளர்கள் எம். எஸ். பிரசாந்த், எம். பி. அமித், மண்டலகுழு தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர் எஸ். ரேணுகா, தலைமைப் பொறியாளர் (பாலங்கள்)  எஸ். காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: