×

விலங்குகளிடம் சிப் பொருத்தி வெற்றிக்கண்ட நியூராலிங் நிறுவனம்: மனித மூளைக்குள் சிப் பொருத்த எலான் மஸ்க் திட்டம்

பெல்ஜியம்: விலங்குகளிடமான சோதனை வெற்றியை தொடர்ந்து மனிதனின் மூளைக்குள்ளும் சிப் பொருத்தி சோதிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம் அறிவித்துள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டிவிட்டர் நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் மனித மூளையை ஆராய்ச்சி செய்யும் நியூராலிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மனிதனின் மூளையை கணினியுடன் இணைத்து செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விலங்குகளை தொடர்ந்து மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை நடத்தும் அடுத்த கட்டத்திற்கு நியூராலிங் நிறுவனம் முன்னேறி இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் சிறிய நாணயம் வடிவில் இருக்கும் சிப்பை மனித மண்டை ஓட்டிற்குள் அடுத்த 6 மாதங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான சோதனை அறிக்கைகளை அமெரிக்கா உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வழங்கி இருப்பதாகவும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி மூலம் பார்வையற்றவர்களுக்கு பார்வை திறனை வழங்குவது கை, கால் முடங்கியவர்களின் எண்ணத்தை செயல்பட உதவுவது தான் தங்களின் நோக்கம் என எலன் மஸ்க். இதனால் பார்க்கின்சன் போன்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த சிப் தயாரானதும் தானும் ஒன்றை மூளைக்குள் பொருத்தி கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


Tags : Elon Musk , Animal, Chip, Neuraling, Institute, Human, Brain, Chip, Musk, Project
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...