மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது: நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்கால்: மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். டிசம்பர் மாதத்துக்கு 27,140 மெட்ரி டன் யூரியா தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ரயில் மூலமாகவும் சாலை மார்க்கமாவும் யூரியா உரம் அனுப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கு தேவையான  44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்ததையடுத்து உரத்தை தேவைக்கேற்ப பிற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

தமிழகத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு இல்லை என அரசு சார்பாகவும், வேளாண்துறை சார்பாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக உரத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், கையிருப்பு வைத்து கொள்வதற்காகவும் உரம்  காரைக்கால் துறைமுகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்கு 27,140 மெட்ரி டன் யூரியா ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் 1,573 மெட்ரிக் டன் யூரியா உரமும், 110 மெட்ரி டன் டிஏபி, 353 மெட்ரி டன் பொட்டாஷ், 726 மெட்ரி டன் காம்ப்ளக்ஸ் உரம், இவை அனைத்தும் வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உரம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்ததையடுத்து உரத்தை 45 கிலோ மூட்டைகளாக பேக்கிங் செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வேளாண் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: