பனிபொழிவு மற்றும் மழை பொழிவின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000க்கும், மதுரையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடும் பனிபொழிவின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.   

சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மட்டும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுவது வழக்கம். அதேபோல் மழை மற்றும் பனி காலங்களில் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாகவும் பனிபொழிவின் காரணமாகவும் பூக்களின் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் குமரி மாவட்டம் தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மதுரையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் நேற்று ரூ.1500 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று பிச்சிப்பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் ரூ.1000ஐ தாண்டியுள்ளது.

பனிபொழிவின் காரணமாக பூக்களின் மொட்டுக்கள் கருகி விடுவதால் சந்தைக்கு வரக்கூடிய  பூக்களின் வரத்தும் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories: