மகளிருக்கான உரிமைத் தொகை வரும் ஆண்டில் வழங்கப்படும்: 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு தொடக்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு..!

சென்னை : வரும் ஆண்டில் மகளிருக்கான உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 13-வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டினை சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.

3 நாட்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவான நேற்று கரகாட்டம், தெருக்கூத்து என தமிழரின் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டின் வருவாய் பெருக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நல்ல இளைஞர்களை, மாணவர்களை உருவாக்குகிற ஆற்றல் தொடக்க கல்வி ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது என்றார். ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: