பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கைது

ஈரோடு: பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறைக்கும், காவல்துறைக்கும் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கடந்த 30ம் தேதி மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்மை நிரூபிக்கப்பட்டதால் பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories: