தமிழகத்தில் வரும் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் வரும் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: