சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,916க்கும், சவரன் ரூ.39,328க்கு விற்கப்பட்டது. 30ம் தேதி தங்கம் விலை அதிகரித்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,936க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,488க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,955க்கும், சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,640க்கும் விற்கப்பட்டது. நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,010க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,080க்கும் விற்க்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5020க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40160க்கும் விற்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் தங்கம் விலை தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.832 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்து வருவது விசேஷத்திற்காக நகை வாங்க காத்திருப்போருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: