தகுதியில்லாதவர்களுக்கு வீடு ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியகளுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்றும் அரசு தரப்பில் ஆஜரான அழகுகவுதம்  தெரிவித்தார்.

சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: