90-வது பிறந்தநாள் கி.வீரமணிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: 90வது பிறந்தாள் காணும் திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் லட்சியத்தை முழங்கத் தொடங்கி தொண்டறத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, இளையோருக்கு நிகராக சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஐயாவிற்கு (கி.வீரமணி) அகவை 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன். திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய், வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் ஐயா நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: