டிரோனில் கடத்த முயன்ற 5 கிலோ ஹெராயின் பறிமுதல்

சண்டிகர்: பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வயலில் சுமார் 5 கிலோ ஹெராயினுடன் டிரோன் ஒன்று கைப்பற்றப்பட்டது. பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் டிரோன் ஊடுருவல் முயற்சிகளை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் டிரோன்கள் சுட்டு வீழத்தப்பட்டுகின்றது. நேற்று தர்ன் தாரன் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்பகுதியில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. அதில், 5 கிலோ ஹெராயின் இணைக்கப்பட்டு கடத்த முயற்சி செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிரோன் மற்றும் ஹெராயின் போதை பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Stories: