கழுத்தில் கம்பி குத்தி ரயில் பயணி பரிதாப பலி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் இரும்பு கம்பி கழுத்தில் குத்தியதில் ஒருவர் பலியானார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து டெல்லி வரை செல்லும் நீலச்சல் எக்ஸ்பிரஸ் ரயில், பிரயாக்ராஜ் மண்டலத்தில் உள்ள தன்வார்-சோம்னா பகுதியை நேற்று காலை 8.45 மணிக்கு கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளம் அமைக்க வைக்கப்பட்டிருந்த கம்பி ஒன்று ரயிலில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து  ரிஷிகேஷ் துபே என்ற பயணியின் கழுத்தில் பாய்ந்தது. இதில், உட்கார்ந்த நிலையிலேயே அவர் பரிதாப உயரிழந்தார்.

Related Stories: