ஸ்டெர்லைட் வழக்கு ஜனவரியில் விசாரணை

புதுடெல்லி: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் ஆகிய அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், இந்த வழக்கு நீண்ட நாட்காளாக நிலுவையில் உள்ளதால் விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை தற்போது விசாரிக்க முடியாது. இருப்பினும் ஜனவரி மாதம் பட்டியலிட்டு விசாரிக்கிறோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

Related Stories: