2ம் கட்ட தேர்தல் குஜராத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது: மோடி உள்பட தலைவர்கள் முற்றுகை

அகமதாபாத்: குஜராத் தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 182  சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள்( 5ம் தேதி) நடைபெற உள்ளது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

இறுதிகட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா என பாஜ  தலைவர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருபக்கம் காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சியும் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இன்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருவதால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். அதை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 8 ஆம் தேதி எண்ணப் படுகின்றன. அன்றைய தினம் பிற்பகலுக்குள் குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற விவரம் தெரியவந்துவிடும்.

* கடந்த தேர்தலை விட 3.45 சதவீதம் குறைவு; முதல் கட்ட தேர்தலில் 63.30 சதவீத ஓட்டுப்பதிவு

குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடந்தது. இதில் ஒட்டுமொத்தமாக 63.30 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு 66.75 சதவீதம் பதிவாகி இருந்தது. அதை விட 3.45 சதவீத வாக்குகள் குறைவாக இந்த தேர்தலில் பதிவாகி உள்ளன. பழங்குடியினர் அதிகம் உள்ள நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 78.24 சதவீத வாக்குகளும, தபாய் பகுதியில் 76.91 சதவீதம், நவசராய் மாவட்டத்தில் 71.06 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. போட்டத் மாவட்டத்தில் மிகவும் குறைவாக 57.58 சதவீதம், அம்ரேலியில் 57.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. சூரத்தில் 62.27, ராஜ்கோட்டில் 60.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

* தேர்தல் நடக்கும் மாவட்டங்கள்

1. பனஸ்கந்தா-9 தொகுதி,

2. பதான்- 4 தொகுதி,

3. மெக்சனா-7 தொகுதி,

4. சபர்கந்தா-4 தொகுதி,

5. ஆரவல்லி-3 தொகுதி,

6. காந்திநகர்-5 தொகுதி,

7. அகமதாபாத்-21 தொகுதி,

8. ஆனந்த்-8 தொகுதி,

9. கேதா-6 தொகுதி,

10. மகிசாகர்-3 தொகுதி,

11. பஞ்ச்மஹால்ஸ்-5தொகுதி,

12.டாகுத்-6 தொகுதி, 13.வதோதரா-10 தொகுதி, 14.சோட்டா உதய்பூர்-3 தொகுதி.

Related Stories: