காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு பாஜவில் பொறுப்பு

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் சுனில் ஜாகர் ஆகியோரை தேசிய செயற்குழு உறுப்பினர்களாக பாஜ அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்  பாஜ தேசிய செயற்குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல, உத்தரப்பிரதேச பாஜ மாநில தலைவர் சுனில் ஜாகரையும் தேசிய செயற்குழு உறுப்பினராக பாஜ நியமித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்து அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜவில் சேர்ந்த ஜெய்வீர் ஷெர்கில், பாஜவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட், சட்டீஸ்கர் மாநில பாஜ தலைவர்களான மதன் கவுசிக், விஷ்ணு தியோ சாய் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ராணா குர்மித் சிங் சோதி, மனோரஞ்சன் கலியா, அமன்ஜோத் கவுர் ஆகியோர் தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: