சில்லி பாய்ன்ட்...

* ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* வெஸ்ட் இண்டீஸ் - ஆஸி. அணிகளிடையே பெர்த் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று, வர்ணனையாளராக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் (47 வயது) இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

* வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பால் பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்த நிலையில், இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் அவருக்கு பதிலாக லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ராவல்பிண்டியில் நடக்கும் முதல் டெஸ்டின் 2வது நாளான நேற்று இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 657 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஸாகித் மகமூத் 4, நசீம் ஷா 3, முகமது அலி 2, ஹரிஸ் ராவுட் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 181 ரன் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 89 ரன், இமாம் உல் ஹக் 90 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸி. 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 283 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 3ம் நாள் முடிவில் ஆஸி. 2வது இன்னிங்ச்இல் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்துள்ளது.

Related Stories: