எல்லை விவகாரம் மகாராஷ்டிரா அமைச்சர்கள் கர்நாடகா வர தடை

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது,  ‘‘கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையில் எல்லை பிரச்னை தொடர்பான தகராறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னை  காரணமாக இரு மாநில எல்லையில் பதட்டம் நிலவுகிறது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில்  பெலகாவியில் இயங்கி வரும் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி (எம்இஎஸ்) அமைப்பினரின் அழைப்பு ஏற்று, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் வரும் 6ம் தேதி பெலகாவி வருவதாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களை பெலகாவிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று  நமது மாநில தலைமை செயலாளர் வந்திதாசர்மா, மகாராஷ்டிரா மாநில தலைமை செயலாளருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். அதை மீறி அவர்கள் வர முயற்சித்தால், தடை உத்தரவு மாநில அரசின் சார்பில் பிறப்பிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: