13,000 உக்ரைன் வீரர்கள் பலி

கீவ்: உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை விரும்பாத ரஷ்யா அதன் பாதுகாப்பு காரணங்களை காட்டி உக்ரைன் மீது கடந்த பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போர் 9 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உயர் ஆலோசகர் அளித்த தகவலின்படி இந்த போரில் 13,000 உக்ரைன் வீரர்கள் வரை பலியாகி இருக்க கூடும் என தெரிகிறது. அவர் கூறுகையில், ``கடந்த ஜூன் மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் தலைமை ராணுவ அதிகாரி போடோலியக் நாளொன்றுக்கு 200 வீரர்கள் வரை பலியாவதாகவும், அதன் பிறகு ஆகஸ்ட் இறுதியில் அளித்த மற்றொரு பேட்டியில் 9,000 வீரர்கள் வரை உயிரிழந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் நேற்று அளித்த பேட்டியில் உக்ரைன் வீரர்கள் 10,000-13,000 பேர் வரை போரில் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories: