குட்கா தயாரித்த இருவர் சிக்கினர்: 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

புழல்: செங்குன்றத்தில் குட்கா தயாரித்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 100 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் செல்வ விநாயகர் கோயில் தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஜர்தா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, செங்குன்றம் போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 100 கிலோ ஜர்தா மற்றும் புகையிலை பொருட்களை அரைக்கும் மிக்சி, மீட்டர் பொருட்கள் இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த லோகேஷ் (24), விஜய் பகதூர் (24) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் மேற்கண்ட போதைப் பொருட்களை ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து சிறிய சிறிய பாக்கெட்டுகளில் தயார் செய்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து,  போலீசார் இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: