திருமணம் செய்துகொள்ள பெண் கொடுக்க மறுத்த பெற்றோருக்கு மிரட்டல் : ஆட்டோ டிரைவர் கைது

ஆலந்தூர்: மணப்பாக்கம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (27). ஆட்டோ டிரைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த செல்வி (23). (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரை தினசரி தனது ஆட்டோவில் கல்லூரிக்கு  செல்வது வழக்கம். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஜித்குமார், தனது தாயாரை அழைத்துக்கொண்டு செல்வி வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரிடம் உங்கள் மகளை காதலிப்பதாகவும், தனக்கு திருமணம் செய்துவைக்கும்படியும் கேட்டுள்ளார்.

ஆனால், செல்வியின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளதால், உங்களுக்கு பெண் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், ‘‘உங்கள் மகளை காதலிக்கிறேன். நான்தான் திருமணம் செய்வேன். எனக்கு திருமணம் செய்து வையுங்கள். இல்லாவிட்டால் நடப்பதே வேறு’’ என்று மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன செல்வியின் பெற்றோர், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து அஜித்குமாரை கைதுசெய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: