குட்கா கடத்தியவர் கைது

புழல்: புழல் திருநீலகண்ட நகர் பகுதியில் புழல் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை பிரித்துப் பார்த்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் திருநீலகண்ட நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார்(40) என தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: