பெட்டிக்கடையில் பதுக்கிய 50 கிலோ குட்கா பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் எத்திராஜ் சுவாமி சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ அந்தோணி ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அந்த கடையில் சோதனை செய்தனர். அப்போது,  பண்டல் பண்டலாக குட்கா பொருட்கள் சிக்கின. மேலும் ஸ்டீல் டப்பாவில் உயர்தர குட்கா பொருட்களும் இருந்தன. அங்கிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கடையின் உரிமையாளரான கொடுங்கையூர் எம்ஆர்.நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (52), ஊழியரான கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த ஹேம்நாத் (22) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இவர்களுக்கு சவுகார்பேட்டை வெங்கடேசன் தெருவை சேர்ந்த மனோஜ் அகர்வால் (48) என்பவர் குட்கா சப்ளை செய்தது தெரியவந்தது. அவரையும் கைது செய்து விசாரித்தபோது, பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்றது தெரியவந்தது. 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: