சென்னையில் பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனை: 7 நாட்களில் 13.7 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பெண்கள் உள்பட 14 பேர் அதிரடி கைது..!

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில் 2 பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,  “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 25.11.2022 முதல் 01.12.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது. 13 கிலோ 700 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 26.11.2022 அன்று மதியம் சாலிகிராமம், ஆற்காடு ரோடு, சென்னை மாநகராட்சி பூங்கா அருகே கண்காணித்த போது, அங்கு 2 நபர்கள் ஆட்டோவில் பதுக்கி வைத்து ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.செல்லா (எ) செல்வராஜ், வ/25, த/பெ.முருகன், எண்.12, புகழேந்தி தெரு, சூளைபள்ளம், எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 2.கணேஷ், வ/29, த/பெ.பாலராமன், எண்.13, அய்யாவு தெரு, இராயப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4.2 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், 3 கத்திகள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த  29.11.2022 அன்று மதியம், புளியந்தோப்பு, ஸ்ட்ரஹான்ஸ் ரோடு, கண்ணப்பன் தெரு, சந்திப்பில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.பிரகாஷ் (எ) குள்ள பிரகாஷ், வ/25, த/பெ.சந்திரன், எண்.3/5, அங்காள அம்மன் கோயில் தெரு, சூளை, சென்னை 2.ஹென்றி (எ) ஹென்றி குமார், வ/21, த/பெ.ஜெரால்டு, எண்.25, டோபிகானா, குடிசைப்பகுதி, ஓட்டேரி, சென்னை ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், N-2 காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 28.11.2022 அன்று காலை காசிமேடு பவர் குப்பம், அம்மா கிளினிக் அருகே ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது பிரியா (எ) பிரியதர்ஷினி, பெ/வ-21, க/பெ.கமல்ராஜ், காசிபுரம் “A” பிளாக், 6வது தெரு, காசிமேடு, சென்னை, இவரது தாய் சரிதா, பெ/வ-41, க/பெ.ரஜினி, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 27.11.2022 அன்று சாலிகிராமம், மஜித் நகர், கோயில் மைதானம் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.மோகன்ராஜ், வ/22, த/பெ.பாலசுப்பிரமணியம், எண்.2, சாலிகிராமம் 2.ஆகாஷ், வ/23, த/பெ.குமார், எண்.2, எஸ்.வி.எம் பாடசாலை தெரு, கொளத்தூர், 3.கமலேஷ், வ/22, த/பெ.ரமேஷ், எண்.2/148, கருமாரியம்மன் கோயில் தெரு, அண்ணாநகர் மேற்கு ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் 1 எடை மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இதுவரை, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 633 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,437 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 766 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Related Stories: