உக்ரைன் மீதான ரஷ்ய போரில் சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்களை மாற்றிக்கொண்டதாக இருநாடுகளும் அறிவிப்பு

ரஷ்யாவிக்கு எதிரான போரில் 10,000 முதல் 13,000 வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த வீரர்களை விட காயமடைந்த வீரர்கள் அதிகம் என உக்ரைன் உயர் அதிகாரி மைக்களோ போலொளியோ தெரிவித்துள்ளார். உக்ரைனும் ரஷ்யாவும் சுமார் 1 லட்சம் வீரர்களை இழந்திருக்க கூடும் என கடந்த மாதம் அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் கருத்து  தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி அலெனா செலன்ஸ்கா உக்ரைன் இழந்த வீரர்களை விட ரஷ்யா இழந்த வீரர்கள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகம் என கூறியிருந்தார்.

இரு நாடுகளும் தலா 50 ராணுவ வீரர்களை மாற்றிக்கொண்டதாக ரஷ்யாவும், உக்ரைனும் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போரில் ஏராளாமான ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அவ்வப்போது கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்துவரும் நிலையில், தற்போது இருதரப்பும் தலா 50 போர் கைதிகளை விடுத்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதினை உடனடியாக தொடர்பு கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு வெள்ளைமாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் கூறியுள்ளார். மேலும் உக்ரானில் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் புடின் ஆர்வம் காட்டினாள் நேட்டோ நட்பு நாடுகளுடன் கலந்து ஆலோசித்து, அவருடன் பேச தயாராக இருப்பதாகவும் பைடன் தெரிவித்தார்.

Related Stories: