அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90% வேலைவாய்ப்பு

சென்னை: சமக தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய மற்றும் மாநில அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, வெளிமாநிலத்தவர்க்கு வாய்ப்புகள் அதிகரிப்பதாக தமிழக மக்கள் உணர்கிறார்கள். ஒன்றிய, மாநில, தனியார் நிறுவனங்களிலும் 90 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் திட்டம் வகுத்து செயல்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: