யூடியூபில் என்னை பற்றி ஆபாசம்: போலீசில் நடிகை புகார்

ஐதராபாத்: தெலுங்கு நடிகை பவித்ரா லோகேஷ், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘அயோக்யா’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘வீட்ல விசேஷம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியானது.நரேஷ் பாபு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று தற்போது மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தபோது நரேஷின் 3வது மனைவி ரம்யா அவர்களை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதற்கிடையே ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் பவித்ரா லோகேஷ் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘என்னைப் பற்றி சில யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பி வருகின்றன. அதில் என்னை ஆபாசமாக சித்தரிக்கிறார்கள். எனக்கு பல பேருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். எனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகிறார்கள். அந்த யூடியூப் சேனல்களை முடக்கி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: